Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி தோல்வியால் 2 ரசிகர்கள் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:17 IST)
சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

 இந்த போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தால் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

 இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது கொடுத்து பலர் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இரண்டு ரசிகர்கள் இந்தியா உலக கோப்பையில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை என மன உளைச்சலில் இரண்டு ரசிகர்கள் இருந்ததாகவும் இதனை அடுத்து திடீரென இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

 தேவ் ராகுல் தாஸ் மற்றும் ராகுல் லோகர் ஆகிய 23 வயதை சேர்ந்த இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments