அரசு அலுவலங்கள், தனியார் அலுவலகங்கள் என அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்வது என்பது தற்போது சவாலான பணியாக உள்ளது. பல பெண்கள் உயரதிகாரிகளாலும், அலுவலகங்களுக்கு சென்று வரும்போது சமூக விரோதிகளாலும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் அந்த மன உளைச்சலோடு பணிபுரிவது என்பது இயலாத ஒரு காரியமாக உள்ளது. இதனை கணக்கில் கொண்டு பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலம் இதில் இருந்து கழிக்கப் படமாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.