Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் திருமண வயது மறுபரிசீலணை –சுதந்திர தின உரையில் மோடி அறிவிப்பு!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:23 IST)
காலை கொடியேற்றி வைத்துவிட்டு இந்திய பிரதமர் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காரணமாக இந்த முறை சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க இந்தியா உறுதியேற்றுள்ளது. நம் நாட்டு பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்தும், போர் விமானங்கள் ஓட்டியும் வானத்தை தொடுகிறார்கள். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கையை வைத்து பெண்களின் திருமணவயதை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்