Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்கள் மீது பிரபல பெண் பத்திரிகையாளர் புகார்?

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (06:30 IST)
ஆங்கில ஊடகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் நடித்த சுறா படம் குறித்து கருத்து கூறுகையில் 'இந்த படத்தை தன்னால் இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை' என்று கூறினார்



 
 
இதற்கு விஜய் ரசிகர்கள் படுமோசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் மரியாதையில்லாத, அச்சில் வெளியிட முடியாத வார்த்தைகளை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அந்த பெண் பத்திரிகையாளர் காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளதாகவும், இதுவரை 22 சமூக வலைத்தள அக்கவுண்டுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், மிக விரைவில் இதுகுறித்த கைது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
கருத்து மோதல்கள் இருந்தால் அவற்றை நாகரீகமாக வெளிப்படுததுவதே சிறந்தது என்றும், போலி சமூக வலைத்தள அக்கவுண்டுகள் மூலம் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments