Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு எதிரொலி: பெப்பர்ஸ்ப்ரே விற்பனை அதிகரிப்பு

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (08:11 IST)
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள பெப்பர் ஸ்பிரே அதிகம் வாங்கி வருவதாகவும் இதனால் பெப்பர் ஸ்பிரே விற்பனை பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் பெண்கள் கராத்தே உள்பட தற்காப்புக்கலை பயில்வதற்கும் அதிகமாக விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று வருவதாகவும் தற்காப்புக் கலை மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஆகியவை காரணமாக பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள தகுதி பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
ஒவ்வொரு பெண்ணுக்கும் போலீசார் பாதுகாப்பு என்பது சாத்தியமில்லாதது என்பதால் பாலியல் தொல்லையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் தயாராக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
 
அதே நேரத்தில் ஆண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித்தந்து வளர்க்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்டத்தின் மூலம் தடுப்பதைவிட சமூக சீர்திருத்தத்தின் மூலமே திருத்துவதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரல்: உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து..!

காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்