Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுரோட்டில் குழந்தை பிறந்த குழந்தை: அவசரத்திற்கு வராத ஆம்புலன்ஸ்

Advertiesment
நடுரோட்டில் குழந்தை பிறந்த குழந்தை: அவசரத்திற்கு வராத ஆம்புலன்ஸ்
, சனி, 24 ஆகஸ்ட் 2019 (13:55 IST)
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கமலாபாய். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது கணவன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் நெடுநேரமாகியும் ஆம்புலன்ஸ் வருவதற்கான அறிகுறி இல்லை.

தன் மனைவி வலியால் துடித்துக் கொண்டிருப்பதை தாங்கி கொள்ள முடியாத அந்த கணவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே அவரது மனைவிக்கு பிரசவத்திற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. வண்டியை சாலையோரமாக நிறுத்தியிருக்கிறார்கள். அந்த இடத்திலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

உடனடியாக தாயையும், குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேரும் அந்த கடைசி நிமிடம் வரை அவர்களை அழைக்க எந்த ஆம்புலன்ஸும் வரவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்!