Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 ஆண்களை திருமணம் செய்த பெண் : மணமகண் தேவை விளம்பரம் மூலம் மோசடி

10 ஆண்களை திருமணம் செய்த பெண் : மணமகண் தேவை விளம்பரம் மூலம் மோசடி
, செவ்வாய், 20 ஜூன் 2017 (14:19 IST)
செய்திதாளில் விளம்பரம் கொடுத்து, பல ஆண்களை திருமணம் செய்த பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
முன்பெல்லாம், மோசடி செய்து பல பெண்களை செய்த ஆண்கள் பற்றிதான் செய்தி வந்து கொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக, ஆண்களை ஏமாற்றி ஒரே பெண் பல திருமணங்கள் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
 
இதுபோன்ற சம்பவம் தற்போது கேரளாவில் நடந்துள்ளது. அந்த மாநிலத்தின் தினசரி செய்திதாளில் கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை என்கிற விளம்பரத்தை ஒருவர் பார்த்துள்ளார். அதில், கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் ஷாலினி என்ற பெண் பேசியுள்ளார்.  கணவனை இழந்த தான் பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறிய ஷாலினி, தனக்கு யாருமில்லை எனக்கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். இதைக் கேட்ட மனம் கலங்கிய அந்த வாலிபர், ஷாலினியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.
 
மணமகன் வீட்டார் மட்டும் கலந்து கொள்ள திருமண ஏற்பாடு நடந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு ஷாலினையை கண்டதும் எங்கோ பொறிதட்ட, தன் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்துள்ளார்.
 
அதாவது, ஷாலினியை ஏற்கனவே திருமனம் செய்தவர்தான் அவர். அவர் அந்த இடத்திற்கு வந்ததும் அந்த இடம் களோபரமானது. அதன் பின் அந்த விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது. அப்போதுதான், இப்படி செய்திதாளில் விளம்பரம் கொடுத்து, இதுவரை ஷாலினி 9 பேரை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
மேலும், திருமணமான அன்றே, நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவதை ஷாலினி வழக்கமாக வைத்திருந்ததும், அவர் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் 5 மோசடி வழக்குகள் பதிவாகியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு : சட்டசபையில் பரபரப்பு