Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவதார் படம் பார்த்த பெண் திடீர் மரணம்! – திரையரங்கில் அதிர்ச்சி!

Advertiesment
அவதார் படம் பார்த்த பெண் திடீர் மரணம்! – திரையரங்கில் அதிர்ச்சி!
, ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (08:42 IST)
பிரபல ஹாலிவுட் படமான அவதாரின் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் பார்த்த பெண் மாரடைப்பால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’. இந்த படம் கடந்த 16ம் தேதி வெளியான நிலையில் அனைத்து பகுதிகளிலும் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடி வருகிறது.

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் அவதார் படத்தை காண லெட்சுமி ரெட்டி என்ற பெண் சென்றுள்ளார். படம் ஓடிக் கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

படம் பார்க்கும்போது ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்துமஸ் கொண்டாடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! – அமெரிக்காவில் அதிர்ச்சி!