Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா சோதனை? அத்துமீறிய பரிசோதகர்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:32 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சோதனை செய்துகொள்வதற்காக சென்ற பெண்ணிடம் அத்துமீறியுள்ளார் லேப் டெக்னீசியன் ஒருவர்.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் மக்களிடையே பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் தாமாகவே முன்வந்து பலரும் சோதனைகள் செய்து கொள்கின்றனர். அப்படி சோதனை செய்துகொள்ள சென்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த  அமராவதி பகுதியில் வேலை செய்யும் 24 வயதான பெண் ஒருவர் தன் சகப் பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனக்காக பரிசோதனை செய்துகொள்ள அருகில் இருந்த கொரோனா சோதனை மையத்துகு சென்றுள்ளார். அங்கிருந்த லேய் டெக்னீசியன், மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகளை எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிற்ப்புறுப்பில் இருந்தும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என சொல்ல விபரமறியடாத அந்த பெண் அதற்கும் சம்மதித்துள்ளார்.

இது சம்மந்தமாக தனது தோழி மற்றும் சகோதரரிடம் பகிர்ந்துகொள்ள அவர் மருத்துவர்களிடம் சென்று இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் மூக்கில் இருந்து சளி எடுத்தால் போதுமென்று சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் மீது புகாரளிக்க, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments