Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலிரவுக்கு சென்ற இந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

முதலிரவுக்கு சென்ற இந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

முதலிரவுக்கு சென்ற இந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?
, வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:07 IST)
உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத்தில் திருமணமாகி முதலிரவுக்கு சென்ற மணப்பெண் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.


 
 
காஸியாபாத்தை சேர்ந்த பங்கஜ் என்பவருக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரு பெண்ணுடன் திருமணமானது. இவர் முதலிரவுக்கு சென்ற போது அவரது மனைவி தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து தூங்க வைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த 77 ஆயிரம் பணம் மற்றும் 175 கிராம் நகைகளை எடுத்து விட்டு மாயமாகியுள்ளார்.
 
இதனையடுத்து மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் மணமக்கள் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர். அறை கதவை தாட்டியபோது அது உள்பக்கம் பூட்டாமல் திறந்தே இருந்தது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பங்கஜ் தூங்கி கொண்டு இருந்தார்.
 
அவர் எழுப்பியும் அவர் எழும்பவில்லை. இதனையடுத்து முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். அதன் பின்னர் அவரிடம் கேட்ட போது அந்த பெண் கொடுத்த தண்ணீரை குடித்த பின்னர் நான் தூங்கிவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.
 
இதனையடுத்து அந்த பெண்ணை வீடு முழுவதும் தேடியும் அவரை காணவில்லை. அப்போது தான் தெரியவந்தது அவர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துக்கொண்டு சென்றது. இதனையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் அந்த பெண் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஸ்ட்ரோவுக்கு கமல்ஹாசன் புகழாரம் - ’அவரைப் போல் அநேக வீரர்கள்’