Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விப்ரோ சி.இ.ஓ திடீரென பதவி விலகல்.. என்ன காரணம்?

Advertiesment
விப்ரோ சி.இ.ஓ திடீரென பதவி விலகல்.. என்ன காரணம்?

Siva

, ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:24 IST)
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்ட் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார் 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ பதவியை ஏற்ற தியோரி, விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் இவர் சிஇஓ பதவிக்கு வந்தவுடன் விப்ரோ உயர்மட்ட நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்தார், அப்படி செய்தால் தான் நிறுவனம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் முடிவு செய்தார் 
 
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியோரி, திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது விலகல் விப்ரோ நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ என்ன காரணத்திற்காக விலகினார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று ஜேபி நட்டா தேர்தல் பிரசாரம்: ராதிகாவுக்கு வாக்கு கேட்கிறார்..!