Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடைகளை 3 நாள் மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (08:15 IST)
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18ஆம் தேதி அசம்பாவிதம் ஏதும் நடக்காவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், அதில் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூன்று நாட்கள் மூட உத்தரவிட்டுள்ளது. 
 
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதேபோல் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்றும் மதுக்கடைகள் மூடப்படும். இந்த உத்தரவு விரைவில் தமிழகத்திற்கும் பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. 
 
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சுதாரிப்பாக பலர் முன்கூட்டியே தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஏப்ரல் 15ஆம் தேதி அதிகளவு மதுவிற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments