Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் முடிவுக்கு வருமா? ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.!

Senthil Velan
சனி, 27 ஜூலை 2024 (13:00 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர்  இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.   கடந்த ஜூலை 8ஆம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்து இருப்பதை பார்க்கையில், அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
 
இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தான்  பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ALSO READ: நிதி ஆயோக் கூட்டத்தில் பாராபட்சம்.! மம்தா பானர்ஜி வெளிநடப்பு..!!

ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மத்திய வெளியுறவு அமைச்சகம் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments