Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகள் மீதான வழக்கு – பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற முடிவு ?

விவசாயிகள் மீதான வழக்கு – பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெற முடிவு ?
, வெள்ளி, 3 மே 2019 (08:59 IST)
குஜராத் விவசாயிகள் மீது காப்புரிமைப் பெற்ற உருளைக் கிழங்குகளை அனுமதி இல்லாமல் பயிரிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை பெப்சிகோ நிறுவனம் வாபஸ் பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் காப்புரிமை பெறப்பட்ட எஃப்.சி.5 ரக உருளைக் கிழங்கை விவசாயிகள் தங்கள் அனுமதியின்றி பயிரிடுவதாக கூறி 9 விவசாயிகள் மீது பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தது. மேலும் விவசாயிகளிடம் இருந்து நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் கேட்டது.

இந்த விஷயம் நாடெங்கும் உள்ள விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தேசிய ஊடக்ங்களில் செய்தியான போது குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் எனக் கூறியது. பெப்ஸிகோ நிறுவனம் குறிப்பிட்ட உருளைக் கிழங்கை தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பயிறிடுமாறு அழைப்பு விடுத்தது.

இதையடுத்து அரசு தலைமையில் விவசாயிகள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக எடுக்கப்பட்டு விட்டதாகக் கூறி பெப்ஸிகோ நிறுவனம் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற இருக்கிறது. இது தொடர்பாக இந்திய செய்தி தொடர்பாளர் ’ இந்த பிரச்சனையில் சுமுகமான, நீண்ட காலத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்டுக்கு 72000 ரூபாய் திட்டம்; ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் – ராகுல் உறுதி !