Webdunia - Bharat's app for daily news and videos

Install App

EMI கட்ட கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (10:38 IST)
EMI கட்ட கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு. 
2. ஆதார் - பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜுன் 30 வரை நீட்டிப்பு.
3. மார்ச், ஏப்ரம் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிப்பு.
4. பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது.
5. விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பு.
6. TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். 
7. டெபிட் கார்ட் மூலம் எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் 3 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
8. வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு. 
 
இந்த சலுகைகளுக்கு மத்தியில் மாதந்திர தவணைகளை கட்டுவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பணத்தை கட்டாமல் இருந்தால் கட்டத்தவறியவர்களின் பெயர் சிபில் அறிக்கையில் வெளியாகும் என தெரிகிறது. 
 
எனவே, மாதந்திர தவணைகளை கட்டும் தேதியை கூடுதல் வட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது 3 மாதங்களுக்கு இதனை தள்ளி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு இதனை பரிசீலிக்குமா என்பது சந்தேகமே. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments