எமர்ஜென்சிக்கான அவசியம் இல்லை: மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள் என்ன??

செவ்வாய், 24 மார்ச் 2020 (17:03 IST)
கொரோனா வைரஸ் தொற்றால் மத்திய அரசு மக்களுக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
1. வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு. 
2. ஆதார் - பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜுன் 30 வரை நீட்டிப்பு.
3. மார்ச், ஏப்ரம் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிப்பு.
4. பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது.
5. விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பு.
6. TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். 
7. டெபிட் கார்ட் மூலம் எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் 3 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
8. வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு. 
 
அதோடு, கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரோனா வைரஸ்: வீட்டைவிட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை