Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கைது

Advertiesment
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கைது
, வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (12:41 IST)
ஐதராபாத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதலால் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தவறான உறவிற்கு ஆசைப்பட்டு பலர் தங்களது வாழ்க்கையை துலைத்து விட்டு அவதிப்படுகின்றனர்,
 
 ஐதராபாத் மதனப்பேட்டையை சேர்ந்தவர்  ராஜூ. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கு அவரது உறவுக்கார பயனோடு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
 
ஒரு கட்டத்தில் இது ராஜூவிற்கு தெரிய வரவே, கவிதாவை கடுமையாக திட்டியுள்ளார். கணவர் உயிரோடு இருந்தால் தனது உறவை தொடர முடியாது என நினைத்த கவிதா, தனது கள்ளக் காதலனோடு சேர்ந்து ராஜூவைக் கொல்ல திட்டமிட்டு, பின் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு,  பிணத்தை காட்டிற்குள் சென்று வீசிவிட்டார். 
webdunia
இதனையடுத்து கணவனைக் காணவில்லை என ஒன்றும் தெரியாதது போல், கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகித்த போலீஸார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தன் கணவரை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து காட்டிற்குள் வீசியதாக தெரிவித்தார். போலீஸார் ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கவிதாவையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சைக்கிள் பேரணி தொடங்கினார் சந்திரபாபு நாயுடு