Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா பாணியில் திட்டமிட்டுக் கணவனைக் கொன்ற மனைவி – சிக்கியது எப்படி ?

Advertiesment
சினிமா பாணியில் திட்டமிட்டுக் கணவனைக் கொன்ற மனைவி – சிக்கியது எப்படி ?
, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (10:28 IST)
தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை மனைவியும் அவரது காதலனும் திட்டமிட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிட்ரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருகின்றனர் பிரமோத் மற்றும் தீப்தி தம்பதியினர். தீப்திக்கு அதேப் பகுதியில் வசிக்கும் உத்தவ் எனும் நபரோடு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவிக் காதலாக மாறியுள்ளது.. இதைக் கண்டுபிடித்த பிரமோத் தீப்தியைக் கண்டித்து சண்டையிட்டுள்ளார்.

ஆனால் தீப்தி தனதுக் கள்ளக்காதலை நிறுத்துவதாக இல்லை. கணவனுக்குத் தெரியாமல் உத்தவ்வுடன் தனது காதலை தொடர்ந்துள்ளார். ஒருக் கட்டத்தில் தங்கள் காதலுக்கு தடையாக உள்ள பிரமோத்தைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். திட்டத்தின் படி தீப்தி, பிரமோத் குடிக்கும் தேநீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதைக் குடித்த பிரமோத்தும் வீட்டுக்குள்ளேயே இறந்துள்ளார்.

போலிஸ் விசாரணையில் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அந்த தேநீர் கப்பில் தானும் தேநீர் குடித்தது போலக் காட்டிக்கொள்ள தன்னுடைய உதட்டுச் சாயத்தைப் பூசியுள்ளார். மேலும் பிரமோத்தின் படுக்கைக்கு அருகில் நிறைய ஆணுறைகளை ஒளித்து வைத்துள்ளார். போலிஸ் விசாரித்தால் பிரமோத்துக்குப் பல பெண்கள் தொடர்பு இருந்ததாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாக சொல்லிவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளார்.

ஆனால் போலிஸ் நடத்திய குறுக்கு விசாரணையாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையாலும் தீப்திதான் கொலையாளி என்பது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து தீப்தி மீதும் அவர் காதலன் மேலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படியில் அமர்ந்தால் 30 ஆயிரம் அபராதம்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்