Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஏன் 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கூடாது- உயர் நீதிமன்றம் யோசனை

ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஏன் 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கூடாது- உயர் நீதிமன்றம் யோசனை
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:25 IST)
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஏன் 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கூடாது என கர்நாடாக பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் யோசனை  கூறியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலரும் காவி துண்டு அணிந்து வந்து போராட்டம் நடத்துவது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவ்வாறு இருதரப்பிலும் போராட்டங்கள் கிளம்பும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஏன் 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கூடாது என கர்நாடாக பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் யோசனை  கூறியுள்ளது.

மேலும்,  கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி சிறுபான்மை பிரிவு  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று  அம்மாநில தலைமை நீதிபதி ரித்துராஜ் இன்று  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹுண்டாய் சர்ச்சை: விளக்கம் கேட்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!