இந்திய பங்கு சந்தை இன்று படு வீழ்ச்சி அடைந்ததற்கு என்ன காரணம் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்கு சந்தை 1700 புள்ளிகளுக்கு மேலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் இன்று வீழ்ச்சி அடைந்தது. இதனால் சுமார் 10 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பங்குச்சந்தை நிபுணர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் இருப்பதன் காரணமாக தான் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த தெரிவித்துள்ளனர்
உலோக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்துள்ளதாகவும், டிசிஎஸ் அவரை மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது