ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி உள்ள நிலையில் அந்நிறுவனத்தை டாடாவிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இருப்புநிலை கணக்குகள் மற்றும் சர்வதேச ஒழுங்கு முறைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 8,500 பேர் பணியாற்றி வருவதாகவும் அவர்கள் அனைவரும் இனி டாடா நிறுவனத்தின் ஊழியர்களாக கருதப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது
மேலும் தற்போது பணிபுரிந்து வரும் 8500 ஊழியர்களில் 5000 பேர் அடுத்த 5 ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுகிறார்கள் என்பதும், ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் டாடா நிறுவனங்களின் பணி ஓய்வு பெறும் வயதில் மாறுபாடு இருப்பதால் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதனால் காலதாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது