Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் ஏன்.! மக்களவையில் ஜே.பி நட்டா விளக்கம்..!!

Senthil Velan
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (12:58 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், தற்போது 2024 மக்கவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் இதுவரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்து மக்களவையில் இன்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

ALSO READ: தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட முயற்சி..! தவறான தகவல்களை பரப்புவதாக ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!!
 
தொழில்நுட்பக் காரணங்களால் தான் கட்டுமான பணிகள் தூங்குவதில் தாமதமானது என்றும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் மிக விரைவில் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை 17 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று ஜே.பி நட்டா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments