திரிபுராவில் காங்கிரஸ் தோல்வி ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (13:25 IST)
திரிபுரா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக் ஆட்சி செய்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை பாஜக வீழ்த்தியுள்ளது. இவ்வளவிற்கும் கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, இம்முறை ஆட்சியை பிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தில் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை

இந்த நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தாபானர்ஜி, திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தான் ராகுல் காந்தியுடன் பேசியதாகவும், ஆனால் ராகுல் காந்தி தனது ஆலோசனையை மதிக்காமல் தனித்து போட்டியிட்டதாகவும், இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து அவமானம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் திரிபுராவில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments