Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக தலைவர்கள் அப்படி பேசியிருக்க கூடாது: டெல்லி தேர்தல் குறித்து அமித்ஷா

பாஜக தலைவர்கள் அப்படி பேசியிருக்க கூடாது: டெல்லி தேர்தல் குறித்து அமித்ஷா
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:13 IST)
பாஜக தலைவர்கள் அப்படி பேசியிருக்க கூடாது என்றும் அதுவே டெல்லி தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார் 
 
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கூறிய அமித்ஷா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிஏஏஎதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
அதேபோல அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி போல பாஜக தலைவர்கள் பேசியதும் டெல்லி மக்கள் விரும்பவில்லை என்றும் பாஜக தலைவர்களின் தவறான தேர்தல் பிரச்சாரம் தான் பாஜக வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார் 
 
இருப்பினும் டெல்லி மக்கள் பாஜகவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விடவில்லை என்றும் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி வாய்ப்பை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் இழந்தது என்றும் கூறினார்
 
மேலும் ஆம் ஆத்மி டெல்லியில் 7 தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளதாகவும் அதனால் மக்கள் அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள் என்று கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
இந்த தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கவனமாக பேச வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக் காதலியைத் தேடி சென்ற குடும்பஸ்தன் – மனைவி போலிஸில் புகார் !