Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அந்தோனி பேட்டி

கேரளாவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அந்தோனி பேட்டி
, செவ்வாய், 30 மார்ச் 2021 (06:40 IST)
கேரளாவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அந்தோனி பேட்டி
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அந்தோணி பேட்டி அளித்துள்ளார் 
 
கேரளாவில் முதல்வர் பதவி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவி குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருங்கிணைத்து தலைமையிடம் ஆலோசனை கேட்டு முதலமைச்சரை தேர்வு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தேர்தல் அரசியலில் இருந்து கடந்த 2004ஆம் ஆண்டு நான் விலகி விட்டேன் என்றும் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி அடுத்த ஆண்டு நிறைவடைகிறது என்றும் அதனை அடுத்து அந்த பதவி முடிந்ததும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்றும் கூறினார் 
 
கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது என்பதும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகிய களத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணிகள் மாறி மாறி ஆட்சி கொண்டிருக்கும் கேரளாவில், இம்முறை பாஜகவும் களத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் யாரும் முடிவு செய்யப்படாது வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் இன்று தமிழகம் வருகை: கருப்புக்கொடி, கோபேக் மோடி தயார்!