Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஹராத்தின் அடுத்த முதல்வர் யார்? 5 பேர் பெயர்கள் பரிசீலனை!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:20 IST)
குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில்  முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலையில்  முதல்வர் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தாண்டு அம்மாநிலத்தில் பொதுத்தேர்வ்தல் நடக்க உள்ளதால்  புதிய தொலைநோக்குத் திட்டங்களுக்காகப் புதிய தலைமை தேவைப்படுவதாக அவர் தமது ராஜினாமாவை அடுத்துக் கருத்து தெரிவித்துள்ளார்.  ஆனால் அவரால் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்ள முடியாததால்தான் தலைமை அவரை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து முதல்வராக பதவியேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் சில பெயர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. விஜய் ரூபானியின் கீழ் துணை முதலமைச்சராக பதவி வகித்த நிதின் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ருபாலா, மாநில பாஜக தலைவராக உள்ள சி.ஆர் பட்டேல் மற்றும் கோர்தன் ஜடாஃபியா ஆகியோர்களில் ஒருவர் முதல்வராக அறிவிகக்ப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments