வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

Mahendran
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (17:11 IST)
வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் புதிய வசதி விரைவில் செய்து தரப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்நிலையில், வாட்ஸ் அப் என்ற சமூக வலைதள செயலியில் இன்ஸ்டாகிராம் ஐடியை இணைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப்பில் ஒருவர் பெயர், மொபைல் எண் விவரங்கள் மட்டுமே இருக்கும் என்பதால், இந்த கணக்கை இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்கும் வசதி தற்போது பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், iOS பயனர்கள் தற்போது இந்த வசதியை பெற்று வரும் நிலையில், மற்ற பயனர்களுக்கும் கொண்டுவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த புதிய அம்சத்தால், ஒருவரிடம் வாட்ஸ் அப்எண் இருந்தாலே அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதும், இந்த இரண்டையும் இணைக்க மெட்டா நிறுவனம் அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்ப், கூகுள், மைக்ரோசாப்ட், டாடா பெயர்களில் சாலைகள்.. முதல்வர் அதிரடி முடிவு..!

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments