டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
புதன், 26 மே 2021 (12:23 IST)
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
ஆம், இந்திய அரசின் டிஜிட்டல் கொள்கையால் வாட்ஸ் ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் எனற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ் ஆப் தொடர்ந்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் விதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments