Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்க்கு கொரோனா; எந்த தொற்றும் இல்லாமல் பிறந்த குழந்தை! – உ.பியில் ஆச்சர்யம்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:14 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதித்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரி 2 லட்சம் சராசரியில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்ப்பமான பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குழந்தையையும் பாதிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபிகா திவாரி என்ற பெண் ஏற்கனவே அரிதான நோய் எதிர்ப்பு திறன்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். அவருக்கு திருமணமாகி கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை கொரோனா உள்ளிட்ட எந்த தொற்றும் இல்லாமல் ஆரோக்யமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments