Webdunia - Bharat's app for daily news and videos

Install App

91 பேரை காவு கொண்ட குஜராத் தொங்கு பாலம் விபத்திற்கு காரணம் என்ன?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (08:17 IST)
91 பேரை காவு கொண்ட குஜராத் தொங்கு பாலம் விபத்திற்கு காரணம் என்ன?
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் போடப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் கடந்த ஏழு மாதகாலம் புனரமைப்பு பணிகள் முடித்து உறுதி தன்மைக்கான சான்றிதழ் பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் திறக்கப்பட்ட 4 நாளில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளதால் குஜராத் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விபத்து ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
91 பேர் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
புனரமைப்பு பணிகள் முடிந்தும் உறுதி தன்மை சான்றிதழ் பெறாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments