விபத்துக்குள்ளான ரயிலின் டிரைவர்கள் என்ன ஆனார்கள்? – வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (09:12 IST)
ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் சிக்கிய ரயில்களை இயக்கிய டிரைவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



நேற்று முன் தினம் (ஜூன் 2) மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரவு ஒடிசாவை கடந்தபோது நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானது. இதில் ரயில் பெட்டிகள் அருகே இருந்த ட்ராக்கில் சாய்ந்த நிலையில், வேகமாக வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் அந்த பெட்டிகள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 280க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ள நிலையில் 900க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் பலியான இந்த விபத்தில் மூன்று ரயில்களையும் இயக்கிய லோகோ பைலட் மற்றும் உதவியாளர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு ரயிலை இயக்கிய ஓட்டுனர், உதவியாளர் மற்றும் இரு ரயில் கார்டுகள் என நான்கு பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சரக்கு ரயிலை இயக்கும் ஓட்டுனர், கார்டுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. சிகிச்சை பெற்று வரும் கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுனர் அளிக்கும் தகவல் மூலமே விபத்து குறித்த மேலதிக தகவல்கள் தெரிய வரும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments