Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அபிநந்தன் ’பெயர் வைத்தால் என்னென்ன சலுகைகள் தெரியுமா ?

Advertiesment
What are the
, செவ்வாய், 5 மார்ச் 2019 (19:44 IST)
தாய் நாட்டை காப்பதற்காக விமானப்படையில் பணிபுரிந்து எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரையும் பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை சற்றும் வெளிப்படுத்தாமல் தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்ட விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அவரது பெயருக்கு ஏகப்பட்ட சலுகைகளை நம் நாட்டவர்கள் அதிக தேசப்பற்றின் பொருட்டு அளித்து வருகின்றனர்.
 
அபிநந்தன் என்ற பெயர் வைத்திருக்கும் மக்களுக்கு பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் இலவச பீட்சா வழங்கப்படும் என ஒரு ஹோட்டல் நிறுவனம் தெரிவித்தது.
அதேபோன்று ஆண்கள சிகை திருந்தும் கடைகளிலும் அபிநந்தன் என்ற பெயருள்ள வாடிக்கையாளருக்கு பணம் பெறாமல் சிகை திருத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அபிநந்தன் போன்று மீசை வைத்து சிகை திருத்தம் வைக்க விரும்பினால்  மக்களுக்கு இலவமாகவே கடை உரிமையாளர்கள் செய்து தருகின்றனர்.
 
இதனால் இந்தக் கடைகளில் கூட்டமும் அல்லுகிறது. வியாபாரமும் எகிறுகிறது.  தேசப்பக்தியை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக விவசாயிகளுக்கு உதவும் ’புது செயலி’ அறிமுகம்