Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதக்கம் வாங்கிய மேடையில் குடியுரிமை சட்டநகலை கிழித்தெறிந்த மாணவி: பெரும் பரபரப்பு

பதக்கம் வாங்கிய மேடையில் குடியுரிமை சட்டநகலை கிழித்தெறிந்த மாணவி: பெரும் பரபரப்பு
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:54 IST)
பட்டம் வாங்கும் மேடைக்குச் செல்லும் போது புர்கா அணியக்கூடாது என புதுவை மாணவி ஒருவரை அதிகாரிகள் தடுத்து விவகாரத்தின் பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பதக்கம் பெறுவதற்காக வந்த மாணவி ஒருவர் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தின் நகலை கிழித்தெறியும் காட்சி வைரலாகி வருகிறது 
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்தப் போராட்டத்தின் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் என்ற பல்கலைக்கழகத்தில் இன்று பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்மிதா சவுத்ரி என்ற மாணவி தங்கபதக்கம் வாங்குவதற்காக அழைக்கப்பட்டார். தன்னுடைய பெயர் அழைக்கப்பட்ட உடன் மேடைக்கு சென்ற அந்த மாணவி, திடீரென மறைத்து வைத்திருந்த குடியுரிமை சட்டத்தின் நகலை மேடையிலேயே கிழித்து எறிந்து அதன் பின்னர் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டு ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை ! ஏன் தெரியுமா ?