காணொலியில் கல்யாணம்; ஸொமேட்டோவில் சாப்பாடு! – இது டிஜிட்டல் திருமணம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (11:52 IST)
கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் நிலையில் தம்பதி ஒருவர் தங்கள் திருமணத்தை ஆன்லைனில் நடத்தி முடித்துள்ளது வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கூடும் விழாக்கள் பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்த படி ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த திருமண ஜோடிகள் தங்கள் திருமணத்தை ஆன்லைனிலேயே நடத்தி முடித்த சம்பவம் வைரலாகியுள்ளது. கூகிள் மீட் மூலமாக ஆன்லைனிலேயே பலர் முன்னிலையில் அந்த ஜோடிகள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு ஆன்லைனில் வந்தவர்களுக்கு ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு செயலிகள் மூலம் வீட்டிற்கே உணவை அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் மூலமாகவே நடந்து முடிந்த இந்த திருமணம் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்