சமீபத்தில் பிரதமர் மோடி தன்னை கடவுளின் குழந்தை என்று கூறிக் கொண்ட நிலையில் அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கேலி செய்து வருகின்றனர் என்பதும் கடும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கலவரத்தை தூண்டி விடவும் விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்புவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்துவதற்காக கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் செலுத்துவேன் என்று உத்தரவாதத்திலிருந்து இறைவனாக இருந்தால் பின் வாங்குவாரா? என்று அடுத்தடுத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பிரதமர் மோடியின் தரப்பிலிருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.