Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ மாஸ்டராக மாறிய மம்தா பானர்ஜி: வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (07:52 IST)
டீ மாஸ்டராக மாறிய மம்தா பானர்ஜி: வைரல் புகைப்படம்!
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் திடீரென பொதுமக்களிடையே நெருக்கமாக பழகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே நந்திகிராம் பகுதியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து உள்ள மம்தா பானர்ஜி, நேற்று அந்த பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த டீ கடைக்குச் சென்று டீ குடிக்க முடிவு செய்த அவர், அதிரடியாக டீ கடைக்குள் நுழைந்து தானே மாஸ்டராக மாறி டீ தயாரித்தார்
 
தனக்கு மட்டுமின்றி தன்னுடன் வந்த அனைவருக்கும் டீ தயாரித்துக் கொடுத்த மம்தா பானர்ஜி, அதன்பின் டீக்கடைக்காரரிடம் தான் குடித்த டீக்கு  பணமும் கொடுத்து விட்டு சென்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments