கழுதைக்கு தெரியுமா கோமியத்து வாசனை!? – பாஜக தலைவர் சர்ச்சை கருத்து!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (15:05 IST)
கொரோனாவுடன் போராட இந்தியர்கள் பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 10 லட்சத்தை கடந்து விட்ட நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளது. அதேசமயம் கொரோனாவிற்கு இயற்கை மருத்துவமுறைகள் பலனளிக்குமா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிற்கு மேற்கு வங்க பாஜக தலைவர் பரிந்துரைத்த மருந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் ”இந்தியர்களாகிய நாம் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், கொரோனாவுக்கு எதிராக போராடவும் பசு கோமியம் அருந்த வேண்டும். இதை சிலர் கிண்டல் செய்வார்கள். மது அருந்துவோருக்கு பசுவின் மதிப்பு எப்படி தெரியும்? பசுவின் மதிப்பை கழுதைகள் ஒருபோதும் உணராது” என பேசியுள்ளார்.

அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலர் அவரது கருத்தை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments