Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கறி சோறு போடாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்....

கறி சோறு போடாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்....
, வியாழன், 27 ஏப்ரல் 2017 (19:33 IST)
திருமண விருந்தில் கறி சோறு இல்லாததால் திருமணமே நின்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
உத்தரபிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், அந்த மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள் அனைத்தையும் மூடுமாறு உத்தரவிட்டார். இதனால் பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.  
 
இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள குல்ஹெடி எனும் இடத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பொதுவாக அந்த பகுதியில் விருந்தில் பரிமாறப்படும் எருமைக்கறி பறிமாறப்படவில்லை. மாறாக சைவ உணவு மட்டுமே விருந்தில் இடம் பெற்றிருந்தது.
 
இதனால் மாப்பிள்ளை குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்தனர். மணமகள் வீட்டினர் எவ்வளவு எடுத்துரைத்தும் கேட்காமல் அவர்கள் திருமணத்தையே நிறுத்தி விட்டனர். எனவே, திருமணத்திற்கு வந்திருந்த ஒரு இளைஞர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருக்கும், அந்த பெண்ணுக்கும் உடனடியாக திருமணம் நடந்தது. சைவை உணவும் பறிமாறப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி