Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் வழங்க தடுப்பவர்களைத் தூக்கில் போடுவோம்- நீதிபதிகள்

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:43 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெலியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிடலில்  ஆக்ஸிஜன் பற்றாகுறையாக நோயாளிகள் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா இரண்டாவது அலையில் 54.5 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இந்நிலையில் டில்லியில் ஆக்ஸிஜன் தேவை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 480  மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் 290 மெட்ரிக் டன் மட்டுமே தேவைப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் பலர் இறக்க நேரிடும்  எனக் கூறப்பட்டது.

மக்களுக்கு ஆக்ஸியன் வழங்க  தடையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் அவர்களைத் தூக்கில் போடுவோம்  என நீதிபதிகள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். 

ஆக்ஸிஜன் இறக்குமதிக்காக கலால் வரியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments