Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

Advertiesment
threat

Mahendran

, வியாழன், 23 ஜனவரி 2025 (13:09 IST)
பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் இமெயில் வந்ததை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களான கபில் சர்மா, ராஜ்பால் யாதவ், இயக்குனர் ரோமியோ, பாடகியும் நடிகை  சுகந்தா மிஸ்ரா உள்ளிட்ட சிலருக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அந்த மிரட்டல் இமெயிலில் 'உங்களின் அண்மைக்கால நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் கவனத்திற்கு கொண்டு வருகிறோம், இது விளம்பரத்திற்காக அல்லது உங்களை தொந்தரவு செய்வதற்காக அல்ல, இந்த விஷயத்தை நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் சொல்லும் விஷயத்தை நீங்கள் செல்ல செய்ய தவறினால், மோசமான விளைவுகள் ஏற்படும், உங்களின் தொழில் சொந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவோம், அடுத்த எட்டு மணி நேரத்திற்கு நீங்கள் இந்த இமெயிலுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஈமெயிலை பெற்ற நடிகர் நடிகைகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் இந்த இமெயில் குறித்து ஆய்வு செய்தனர். ஐபி முகவரியை வைத்து பார்த்தபோது இந்த இமெயில் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!