Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2030-ல் இந்தியர்களுக்கு தண்ணீரே இருக்காது? சென்னையின் நிலை என்ன?

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (16:21 IST)
நாட்டில் உள்ள் தண்ணீர் பிரச்சனை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தால், வரும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் இதையடுத்து தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருவதாக நிதி ஆயோக் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. 
 
மேலும், இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலையும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
122 நாடுகளை கொண்ட உலகளவிலான தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தை வகிக்கிறது. மேலும், சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும். இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழவாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments