டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!
டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!
கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தன்வீர் விழா மேடையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பதவி விலக வலியுறுத்தி வருகின்றன.
கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய மொபைல் போனில் ஆபாச படங்களை பார்க்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தன்வீர் வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்த ஆபாச படத்தை பார்த்த சில விநாடிகளிலேயே அதிலிருந்து வெளியே வந்ததாகவும், அவர் குறிப்பிட்ட இணையதளத்துக்கு சென்று ஆபாச காட்சிகளை பார்க்கவில்லை என காங்கிரஸ் விளக்கம் கொடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில் அமைச்சர் பார்த்தது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் மனைவி மெலினாவின் ஆபாச படம் என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த படத்தை அமைச்சர்களிடையே பரிமாறிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.