பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

Mahendran
திங்கள், 19 மே 2025 (14:33 IST)
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு தாக்குதல் குறித்த தகவல் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் “எத்தனை இந்திய போர் விமானங்களை நாம் இழந்தோம்? தாக்குதலுக்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது தவறு மட்டுமல்ல, அது நாட்டுக்கெதிரான குற்றமாகும்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
 
ஏற்கனவே ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம், "பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தானுக்கு முன்பே கூறியதாக" தெரிவித்திருந்தார். இதை ஆதாரமாக கொண்ட ராகுல், இந்தியாவின் ராணுவத் தரப்பை பலவீனமாக்கும் நடவடிக்கையாக இது உள்ளதாக குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், பத்திரிகை தகவல் சரிபார்ப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் பற்றிய விளக்கம் பாகிஸ்தானுக்கு முற்றிலும் முன்பாக இல்லை எனவும், பின்னர் மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தது.
 
இந்த சூழலில், ராகுல் காந்தி மீண்டும் தன்னுடைய பதிப்பில், “ஜெய்சங்கர் இன்று பேசியது மோசமானது. உண்மை வெளிவர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் : 2 துணை முதல்வர்கள் யார் யார்?

மீண்டும் மக்களை சந்திக்க வரும் விஜய்!.. இந்த முறை வேற மாறி!..

டொனால்ட் டிரம்ப் மகன் தாஜ்மஹால் வருகை.. ஆக்ராவில் 200 போலீசார் பாதுகாப்பு..!

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments