வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

Siva
வியாழன், 6 நவம்பர் 2025 (08:13 IST)
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, கொல்கத்தாவில் உள்ள அவரது காளிகாட் இல்லத்தில், அவரது பூத்தின் பூத் நிலை அதிகாரி சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கான வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நேரில் வழங்கினார்.
 
தேர்தல் ஆணைய விதிகளின்படி, இந்த படிவத்தை முதலமைச்சரை தவிர வேறு யாரிடமும் கொடுக்க ஆரம்பத்தில் மறுத்தார். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து படிவத்தை பெற்றுக்கொண்டார்.
 
முதலமைச்சர் மம்தா இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை எதிர்த்து பேரணி நடத்திய மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பேரணியில் பேசிய மம்தா இந்த SIR நடவடிக்கை, மத்திய பாஜக அரசாங்கத்துடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து மேற்கொள்ளும் முறைகேடு என்று குற்றம் சாட்டினார். 
 
அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்களை பங்களாதேஷி என்று முத்திரை குத்துவதாகவும், இது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத பாஜகவின் அறியாமை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments