Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ஐபோன்16 சீரிஸ் மொபைலில் Visual Intelligence வசதி.. பெரும் வரவேற்பு..!

Advertiesment
ஆப்பிள்

Mahendran

, புதன், 11 செப்டம்பர் 2024 (10:12 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சீரிஸ் 16 நேற்று வெளியான நிலையில் இதன் விலை மற்றும் மாடல்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த புதிய ஐபோன் சீரியஸ் 16 இல் விஷுவல் இன்டெலிஜென்ஸ் என்ற வசதி இருப்பதை அறிந்து ஐபோன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விசுவல் இன்டெலிஜென்ஸ் என்பது ஏதாவது ஒரு இடத்தில் நாம் பார்க்கும் பொருள் கட்டிடம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதை புகைப்படம் எடுத்தால் உடனே அந்த புகைப்படத்தில் உள்ளது என்ன என்பது குறித்த ஒரு விரிவான தகவலை தரும்.

அந்த தகவலை நாம் சேமித்துக் கொள்ளலாம் அல்லது வேறொருவருக்கு பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் செல்லும் இடங்களில் நமக்கு தெரியாத ஒரு பொருளையோ இடத்தையோ கட்டிடத்தையோ பார்த்தால் உடனே அது குறித்த முழு தகவல்களை நொடியில் இந்த வசதி மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷுவல் இன்டலிஜென்ஸ் என்ற வசதியுடன் வந்துள்ள இந்த புதிய ஐபோனுக்கு ஐபோன் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி இருந்தாலும் தற்போது ஐபோனில் இந்த புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிப்பூரில் வெடித்த மாணவர் போராட்டம்! 2 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கிய மத்திய அரசு!