Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

உலக அழகியை கவுரவப்படுத்திய கோலி!!

Advertiesment
உலக அழகி
, வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:41 IST)
2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 
 
எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்துக்கொண்டு மனுஷி சில்லரை கவிரவப்படுத்தினார். 
 
விராட் கோலியிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டதும், மனுஷி சில்லர் கோலியிடம் சில கேள்விகளை கேட்டார். அவர் கேட்டவாறு, உலக அரங்கில் விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நீங்கள் சமுதாயத்திற்கு நிறைய செய்துள்ளீர்கள். உங்களை இன்று ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். இளைஞர்களுக்கு ரோல் மாடல். அவர்களுக்கு என்ன சொல்ல விருப்புகிறீர்கள் என கேட்டார். 
 
இதற்கு கோலி பின்வருமாறு பதிலளித்தார், நாம் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதை எப்போது செய்ய வேண்டும் என உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு விஷயத்தை செய்யும்போது மனப்பூர்வமாக செய்யவேண்டும். 
 
நான் எப்போதும் மற்றவர்களை போல் இருக்க நினைத்ததில்லை. நான் நானாகாவே இருக்கிறேன். உங்களுக்கு முன்னுதாரணமாக சிலர் இருக்கலாம், நீங்கள் அவரை பின்பற்றலாம். ஆனால் அவரைப் போலவே நடந்துகொள்ள கூடாது. நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள். 
 
எதற்காகவும் உங்கள் தனித்திறனை மாற்றிக்கொள்ளக்கூடாது, நீங்கள் நீங்களாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். மற்றவர்களை போல் நீங்கள் இருக்க விரும்பினால் உங்களால் வெற்றி பெற முடியாது என பதிலளித்தார் கோலி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.விற்கு மகள் இருக்கிறார் ; சசிகலா, நடரஜனுக்கு மட்டுமே தெரியும் - ஜெ.வின் அண்ணன் பகீர் தகவல்