Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் ராஜினாமா செய்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா..!

Mahendran
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:45 IST)
மல்யுத்த வீரர் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களது ரயில்வே துறையில் உள்ள பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

விளையாட்டு ஒதுக்கீட்டில் சிறப்பு பணி அதிகாரிகளாக வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதனை அடுத்து வினேஷ் போகத் மற்றும் பஜரங் புனியா இருவரும் ரயில்வே துறை அதிகாரி பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து வடக்கு ரயில்வே அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கி உள்ளது. அதேபோல் பஜ்ரங் புனியாவும் அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றியே தீர்வது என்பதற்கு தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments