மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடந்தால் தேர்தலை புறக்கணிப்போம்: கிராம சபையில் தீர்மானம்..!
, செவ்வாய், 10 டிசம்பர் 2024 (18:48 IST)
மின்னணு இயந்திரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிராமத்தில் கிராம சபை முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா என்ற மாவட்டத்தில், கோலேவாடி என்ற கிராமத்தின் கீழ் கிராம சபை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதால், இனி வரும் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் தான் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள கிராம சபை நிர்வாகிகள், எங்கள் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் நடந்தால், தேர்தலை முழுவதுமாக புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாவட்டத்தின் கலெக்டர் கூறியபோது, கோலேவாடி கிராமத்தினர் செய்துள்ள தீர்மானத்தின் நகல் எங்களுக்கு இன்னும் வரவில்லை. அதனால், இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. நகல் எங்களுக்கு வந்தால், அதை படித்து பார்த்து, அதற்குரிய நடவடிக்கை எடுப்போம்," என்று கூறினார்.
இதேபோன்று அனைத்து கிராம சபைகளும் தீர்மானம் இயற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்