Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் ரசித்த மோசடி மன்னன்

, திங்கள், 5 ஜூன் 2017 (06:09 IST)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேற்று இங்கிலாந்து நாட்டின் எட்ஜ்பஸ்டன் நகரில் நடந்தது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஆவலுடன் குவிந்திருந்தனர்.



 


இந்த நிலையில் இந்தியாவில் சுமார் 9000 கோடி கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு தப்பியோடிய பிரபல மோசடி தொழிலதிபர் விஜய்மல்லையாவும் இந்த போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

இந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து விஜய் மல்லைய்யா போட்டியை பார்க்கும் புகைப்படமும், மைதானத்தில் வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கருடன் அவர் நெருங்கிப் பேசுவது போன்ற படமும் சமுக வலைத்தளத்தில் வைரலானது. கவாஸ்கருக்கும் விஜய்மல்லையாவுக்கு எதிராக கடும் கண்டனப்பதிவுகளும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் மோசடி செய்து இங்கிலாந்தில் இருக்கும் ஒரு குற்றவாளியுடன் கவாஸ்கர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி திடீரென நிறுத்தம்