Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் உள்ள துணைவேந்தர்கள் கண்டனம்..! எதற்காக தெரியுமா.?

Senthil Velan
திங்கள், 6 மே 2024 (16:33 IST)
ஆர்எஸ்எஸ் பின்னணி மட்டுமே துணை வேந்தர் நியமனத்துக்கு அடிப்படை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள துணைவேந்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
பாஜக ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்றும் ஆளும் பாஜகவின் சித்தாந்த முதுகெலும்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன்(ஆர்எஸ்எஸ்) அவர்கள் பிணைந்திருப்பதன் அடிப்படையிலேயே அவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்த கருத்துக்கு முன்னாள் மற்றும் இன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உட்பட 181 கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
 
வெளிச்சம் தருவோர் எரிக்கப்படுகிறார்கள்" என்ற தலைப்பிலான ஒரு பகிரங்க கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படும் செயல்முறை மற்றும் அவர்களின் தகுதியை ராகுல் காந்தி கேள்வி எழுப்பியது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை.! மருத்துவத்துறை ஏற்பாடு..!!
 
அத்தகைய கூற்றுக்களை நாங்கள் திட்டவட்டமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் நிராகரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ’அரசியல் மைலேஜ் பெறு நோக்கில் பொய் மற்றும் அவதூறுகளை ராகுல் காந்தி பரப்புவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments